Friday, December 27, 2013

சுனாமிக்கோர் வசைகவி!!!

புயலென வந்திருந்தால் பூட்டியே வைத்திருப்பேன் பெரும் நதியென வந்திருந்தால் அணை கட்டி தடுத்திருப்பேன் பஞ்ஜெம்தான் சூழ்ந்திருந்தால் பணம்காசு கொடுத்திருப்பேன் நீ கொண்டு வந்ததோ பேரலை அதற்கு நான் என்செய்வேன்.....
அரவணைத்த அன்னை எங்கே? அன்பான தந்தை எங்கே? தோல் கொடுத்த தோழன் எங்கே? விரல் கோர்த்த மனைவி எங்கே? அனைவரையும் அள்ளி சென்றாய் - என் வாழ்வில் மண் அள்ளி தூவி சென்றாய்.....

நாம் கோளம் போட்ட முற்றம் எங்கே? எனை பார்த்து சிரித்த தோட்டத்து பூக்கள் எங்கே? அத்தனையும் சுருட்டி சென்றாய் எனை தனிமையில் இருட்டில் இட்டாய் துரோகியே!!!

யாரடி நீ தாடகையோ 
எமன் வீட்டு நாயோ 
வகிரெரிந்து திட்டுகிறேன் 
மண் அள்ளி துற்றுகிறேன் 
நீ நாசமாய் போக.....

Friday, November 15, 2013

ஆரம்பம் .....!!!

கானல் நீர் தேடும் மீனாய் கானாமல் போனது என் காதல்
ஆயுல் ரேகையை ஆராய்ந்து பார்க்காத - நான்
காதல் ரேகை தேடி உள்ளங்கையில் ஓர் ஊர்வலம்.....

மூச்சு நின்றால் மரணம் என்றார்கள் ஆனால் - எனக்கு
அது வரவில்லை உன் மூச்சுக்காற்றை சுவாசிப்பதால்
தண்ணீரில் நிழல் மூழ்காது
கண்ணீரில் இமை மூடாது  - அது போல்
என் மரண படுக்கையிலும் உன் நினைவழியது.....

காதல் தேடும் வழிப்போக்கனாய் கால்கள் விரைந்து ஓடுதே
காதலி தேடும் தேடலின் நடுவே விழிகள் நடனம் ஆடுதே - இவை
இரெண்டுக்கும் நடுவினிலே பாவம் இதய துடிப்பு தடுமாறுதே.....

காதல் கனவோடு வாழாமல் - உன்
நிஜத்தோடு சேரவே
ஐவைந்து வருடமாய் சொப்பனம் தந்தவளின்
முகவரி தேடி தொடங்குதே என் காதல் பயணத்தின் ஆரம்பம்.....

பின் குறிப்பு : 
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்

Monday, August 12, 2013

வாலிபக்கவிஞன் வாலிக்கு சிந்துவின் சமர்ப்பணம் !!!

வெள்ளை பட்டாடையில் உடல் மறைத்து 
தாடிக்குள் முகம் புதைத்து வலம் வந்த கவிதைக்கரசன் நீ
உன் நெற்றிக்குங்குமம் கூறுதே ஓராயிரம் கவிதைகள்..... 

கவிதையால் வன்முறை செய்யும் வன்முறையாளன் நீ
எதுகை மோனையின் சொந்தக்காரன் நீ
கவிதைக்காக பிறந்த காவியத்தலைவன் நீ

உயிர் மெய் எழுத்துக்களை கவிதைக்குள் கட்டிபோட்டவன் நீ
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்ச்சி கொடுத்தவன் நீ
ஒவ்வொரு வார்த்தையாலும் வாசகர் மனதை கரைய வைத்தவன் நீ 

நாட்பத்தி ஒன்பது வருடம் தனில்
பதினையாயிரம் பாடல்கள் உன் பேனா முனையால் 
உன் பேனா தவிக்கிறது இன்று உன் கரம் பற்ற.....

நீங்கள் கண்ணதாசனுக்கு சொன்ன கவியை உங்களுக்காக மீண்டும் 
எழுத படிக்க தெரியாத மானிடர் வரிசையில் கடவுளும் ஒருவன் 
ஒரு கவிதை புஸ்தகத்தை கிளித்து விட்டான் இன்று.....

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்

Saturday, August 3, 2013

வரம் இல்லாமல் கிடைத்த வரம்!!!

"நம் வாழ்வில் எது எதுக்கெல்லாம் கடவுளை பிரார்த்திக்கிறோம் 
நல்ல கல்விய கொடு, காசு கொடு, வேலை கொடு - ஏன் 
நல்ல காதலிய அல்லது நல்ல மனைவிய கொடு என்றெல்லாம் வணங்கிரம் - ஆனால் 
நல்ல நண்பனைக்கொடு இப்படி யாருமே கேட்டதில்லை -ஏன் 
அப்பிடின்னு யாராவது திங் பன்னிருக்கீங்களா............?
ஏன்னா எதிர்பாட்பில்லாமல் கிடைப்பதுதான் நட்பு."

உடலோடு உதிரமாய் 
உறையாது ஊற்றெடுப்பாய்..... விழியோடு இமையாய் 
இமைக்காமல் காத்திருபாய்..... என் பாதம் சுடுமென்று 
உன் முதுகு கதிர் எதிர்க்கும் தலை நரை வந்தபோதும் 
தளுவுதுந்தன் நினைவு நெஞ்சில் விழி சக்தி போன பின்னும் 
உன் விழியால் விம்பம் தந்தாய் இதயத்தின் இறுதி துடிப்பில் 
கலந்திருக்கும் உன் உயிர் மூச்சி நண்பா!!!
என்றும் அன்பு நண்பன் சிந்து.....

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்

Wednesday, June 12, 2013

காதல் திரிதம் !!!

நீ ஒரு திசையிலும் நான் ஒரு திசையிலும் 
அலைந்து திரிந்தோம் இரு காற்றாடியாய் 
சந்தித்தோம் ஒரு திரிதத்தின் இரு அயட்பக்கங்களாய் 
தோழமை மலர்ந்தது மிளிர்ந்தது அது 

மெல்ல மெல்ல காதலாய் வளர்ந்தது..... 
பெண்ணே நாம் நம் காதலால் - இன்று 
ஒரு காதல் திரிதத்தை உருவாக்கி 
அந்த பைதகரஷையே பெருமைப்படுத்தி விட்டோம் !!!

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்

Sunday, June 2, 2013

அம்மா உன் அன்பை தேடி.....

(தாயை விட்டு பிரிந்து வசிக்கும் ஒவ்வொரு சிந்துக்களின் கண்ணீர் காணமிது....)

என் கண்ணில் வழியும் கண்ணீர் தரை தொட முன்னமே
துடைத்து ஆறுதல் சொல்வாயம்மா
இங்கே என் கை குட்டை எனைக்கேள்வி கேட்கிறது .....

வெளியே புன்சிரிப்பு உள்ளே கண் கசக்கு - என
ஏன் இரட்டை வேடம் என்று
முகம் பார்க்கும் கண்ணாடி எனைக்கேள்வி கேட்கிறது .....

உறங்கும் போது காபி..... எழும் போது காபி.....
என உன் அன்புக்கரத்தால் தருவாயே அம்மா - ஆனால்
இங்கு எனை எழுப்பும் அலாரம்கூட சிரிக்குதம்மா.....

அன்று வலிக்கவில்லை - ஆனால்
இப்ப வலிக்குதாம்மா..... நெஞ்சுதவிக்கிதம்மா.....
உன் அன்பை தேடி.....

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Friday, May 24, 2013

நான் செய்தது தவறா பெண்ணே ???

நான் மேலிருந்து வீசிய ஆப்பிள் 
உன் மேல் விழுந்தது தவறு என்கிறாயா? 
இல்லை நான் தவறு செய்யவில்லை - அன்று 
நியூ டன் கண்டுபிடித ஈர்ப்பு விசை தவறு என்றால் 
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....

நான் உன்னை கண் இமைக்காமல் 
பார்த்து ரசிப்பது தவறு என்கிறாயா? 
இல்லை நான் தவறு செய்யவில்லை
உன்னை அழகாக படைத்த அந்த பிரமன் தவறு என்றால் 
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....

உனக்காக இதயவறையில் கோவில் கட்டியது தவறு என்கிறாயா ? 
இல்லை நான் தவறு செய்யவில்லை - அன்று 
ஷாஜஹான் மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியது தவறு என்றால் 
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....

நான் உன்னைக் காதலித்தது தவறு என்கிறாயா?
இல்லை நான் தவறு செய்யவில்லை - அன்று 
ஆதம் ஏவாள் செய்தது தவறு என்றால் 
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....!!!

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Thursday, May 23, 2013

குருதியா??? இதயமா???

என் மரணத்தின் முன்பு நான் உன்னிடம்
எதிர்பார்ப்பது இரண்டே இரண்டுதான்
எனைப்பார்த்து கன்னக்குழி சிறு புன்னகை
ஒரு சிறு கண் சிமிட்டல் - ஆனால்

என் மரணப்படுக்கையின் முன் உனக்காக
ஒன்றே ஒன்றை விட்டுச்செல்ல விரும்புகிறேன்
ஒன்று குருதி அப்பையாவது - உன்
இதயத்தை அடையலாம் என்பதற்கு.....

இரண்டு என் இதயத்தையே கொடுக்க வேண்டும்
காரணம் நீ உயிர் வாழும் வரை உனக்காக - நான்
துடித்துக் கொண்டே இருக்க வேண்டும்
அனைத்துக்கும் நீ என் காதலியானால்.....

நீயே முடிவு செய் குருதியா??? இதயமா???

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Tuesday, April 30, 2013

உழைக்கும் கரங்கள் !!!

(முதல் முறையாக சமூகவியல் கருத்துக்களை பகிர்கிறேன். கீழ் மட்டத் தொழிலாளிகளுக்காக இந்தக் கிறுக்கல்)

தன் வேர்வைத்துளியை விதைத்து
முயட்சி எனும் நீரூற்றி
கடின உழைப்பை உரமாக்கிய
ஒவ்வொரு தொழிலாளியையும்
இன்று நாம் போற்றுவோம்.....

நீ சிந்திய ஒவ்வொரு வியர்வைத்துளியும்
இன்று உன்பேர் சொல்லும்
உன் உள்ளங்கை காயங்களில் வழிந்தோடும்
உதிரம் உனைப் பற்றி கவிவடிக்கும்
உன் உடலின் ஒவ்வொரு அவையும்
படும் பாட்டை யாமறியோம்.....
உன் சரீரம் கொண்ட ஒவ்வொரு வலியும் 
எம் இதயங்களையும் வலிக்கச்செய்யும் - ஆனால்
நீங்கள் கண்ணீர் மட்டும் சிந்தாதீர்கள்
அது இந்த பூலோகத்தையே சுட்டெரித்து விடும்.....

தரணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சிந்துவின் வாழ்த்துக்கள்.....!!!

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்.

Thursday, April 25, 2013

இதயத்துக்கே மின்னட்கடத்தியா ???

ஆகாய மேகத்தால் அவதரித்த பதுமையே 
உனை என் பேனா முனைகளால் 
வரையருக்க ஆசைப்பட்டேன் வார்த்தைகள் வரவில்லை..... 

இடைவிடாது இசைமீட்டிய - உன் 
கொழுசொலியை பதிவுபன்ன பாடுபட்டேன் 
ஸ்வரங்கள் ஆலாபித்தன..... 

உள்ளங்கால் ரேகையினை ஓவியமாக்க 
ஓராயிரம் தூரிகை செய்தேன் 
வர்ணம் வரவில்லை..... 

கன்னக்குழி ஆழத்தை துணிய 
தியொடலைட்யை செப்பம் செய்தேன் - ஆனால் 
அதன் எண்மாணம் தினரிப்போனது பெண்ணே.....

உன் கருவிழி சிமிட்டல் கண்டு என் 
இதயத்துக்கே மின்னட்கடத்தி செய்தேன் - ஆனால் 
உன் காதல் மின்திறனால் என் இதயமே பஷ்பமாகியது பிரியசகி.....

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் doneClick செய்யவும். 

Saturday, April 13, 2013

புதைக்கப்பட்ட காதல் விதை .....!!!

(என் கவி வாசகர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் ஒரு கவி "புதைக்கப்பட்ட காதல் விதை)

இருட்டறையில் மெழுகுவர்த்தியாய் 
இமை மூட உன் முகம்..... 
செவ்வாயில் கூட இடம் கிடைத்து விடும் ஆனால் 
நிலவு உன்னிடம் மட்டும் அது கிடைக்காதா பெண்ணே.....

அடை மழையில் வெறும் காகிதக் கப்பலாய்
என் காதல் பயணம் மூழ்கியது இடை நடுவே.....
மொன்சூன் காற்றில் சிக்கிய சிறு காற்றாடியாய்
சிதைந்து போனது என் காதல் சின்னங்கள்.....

மின்னலில் சிக்கிய சிறு புல்லாய் இன்று - என்
காதலும் மூச்சி விட முடியாது தவிக்குதடி.....
மண்சரிவில் சிக்கிய சருகாய் - என் காதலும் 
எனக்குள்ளே புதைக்கப்பட்டது விதைக்கப்பட்டது.....

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

Friday, April 12, 2013

துபாய் நகரம் உறங்கும் நேரம்.....!!!

துபாய் நகரம் உறங்கும் நேரம் 
நானும் உறங்கினேன் - ஆனால் 
என் நினைவுகள் உறங்கவில்லை 
பேர்ஜ் கலீபாவின் உயரம் வரை அலைந்து திரிந்தது.....

சிந்து இன்னும் சாப்பிட வில்லையா 
என்ற அக்காவின் குறலோசை
மகன் இன்னும் தூங்க வில்லையா 
என்ற அம்மாவின் குறலோசை - என் 
இரு செப்பறைகளிலும் எதிரொலிப்பது போலிருக்க 
என்னிரவுகள் நீண்டபடியே தொடர்ந்தது.....

ஒன்றல்ல இரண்டல்ல ஐவிரு 
நேர்முகப் பரீட்சைகள் - பதில் 
நாளை கிடைக்குமா? இல்லையா? - என்று 
நினைத்தபடியே என் இமை மூட மறந்தது.....

விலைமாதுகளின் அணிவகுப்பு ஒரு புறம் 
அதை விலை பேச சேட்டாக்களின் அணிவகுப்பு மறு புறம் 
இந்த தெருக்கூத்தின் நடுவில் - என் 
துபாய் வாழ்க்கை நடந்தேறியது......

என் வேலைக்கும் பதில் கிடைத்தது 
அத்தனை தடைகளிலும், அத்தனை சிக்களிலும் 
நண்பனாய், தந்தையாய் தோள் கொடுத்தாய் - அண்ணா 
என்றும் தொடர நம் இரத்த உறவு.....