(மகளீர்தினத்துக்கான சிந்துவின் சிறப்புக் கிறுக்கல்.)
அன்பெனும் அரணுக்குள் என்னை அடக்கியாண்டவள் -நீ
கண்ணீர்த்துளிகளால் என்னை கரையவைத்தவள் -நீ
இந்த வாழ்க்கையெனும் திரைக்கதைக்கு என்னை அறிமுகப்படுத்தியவள் -நீ
என் துன்ப துயரங்களுக்காய் கண்ணீர் சிந்த மடி தந்தவள் -நீ
கருமுகிழ் தந்த மழையோ ஓரிரு வாரங்கள்
உன் கருவறை தந்த இதமோ ஐவிரு மாதங்கள்
சிந்து இது நீயெனக்கிட்ட பெயர்
உடல் நீயெனக்கிட்ட பிச்சை
உயிர் நீயென்களித்த வரப்பிரசாதம் -ஆனால்
உனக்களிக்க ஏது மில்லா
ஏழையாய் இந்த சிந்து.....
சாஜஹான் காதலுக்கு ஒரு தாஜ்மஹால் என்றால்
அம்மா நான் உன்மீது கொண்ட காதலுக்கு
ஓராயிரம் தாஜ்மஹாலும் போதாதம்மா!!!
நான் கண் திறந்து கண்ட முதல் பெண் நீ
அது போல கண்மூடும் போதும் உனைப் பார்க்க
என் கண்கள் துடிக்குதம்மா!!!
பின் குறிப்பு :
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள்.
02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது.
- Join this site ஐ Click செய்க.
- பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க.
- பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
- பின் done ஐ Click செய்யவும்.

