Tuesday, November 22, 2011

உடையாத பேனா முனை !!!


பேனாவின் உருவாக்கத்தின்
உண்மையை உணர்ந்தேன் - மானிடா
காதல் தோல்வியால் கண்ணீர் வற்றியதால்
வார்த்தை கிறுக்கத்தானோ என்று!!!

எத்தனை கிறுக்கல்கள் மைதீரும் வரை தீர்ந்த பின்
என் உதிரத்தை மையாக்கி - நான்
எழுதிய என் காதல் கடிதங்களுக்கு
உன் உதடுகலால் முத்திரை இடுவாய் என்று நினைத்தேன் நீயோ உன் பாதணியால் பதம் பார்த்தாய் என் கன்னத்தை!!!

மரண தண்டனையின் பின் தீர்ப்பெழுதிய
பேனா முனைகளை உடைக்கலாம்
ஆனால் என் காதலுக்கு நீ
மரண தண்டனை விதித்த போதும்
என் பேனா முனைகளை உடைத்தெறிய
மனம் மறுக்கிறது ஏன்???
உனைப் பற்றி கவியெழுதிய முனையே அதனாளோ ???


Thursday, November 17, 2011

பூமிக்கு ஈடு நீதானடி!!!


ஆதவனும் அதன் சூழ் கோல்களும் 
கருந்துழை நோக்கி நகர்கிறது 
இது விஞ்ஞானம் சொன்னது 
ஆனால் நானும் என்மனமும் 
உனை நோக்கியே நகர்கிறோம் பெண்ணே 


பூமிபோல் உன்னுள்ளும் 
தினம்தினம் எத்தனை மாற்றங்கள் 
எத்தனை கவர்ச்சிகள் உன்னில் 
ஆனாலும் உனை சுற்றி சுற்றி ரசிக்கும் 
நிலா நான்தானடி பெண்ணே 
இதனால் பூமிக்கு ஈடு நீதானடி!!!





என்னவளைப் பற்றி உங்களிடம் !!!


அவளைப் படைத்த பிரமன் என்னையும் 
படைத்ததுக்கு அர்த்தம் இல்லாமலா போயிடும் 
என்று எனக்குள்ளே ஒரு புன்முறுவல் 
அவளை பார்க்கும் போதெல்லாம்.....

அவளின் சிறு சிரிப்பு அது எனக்கு அடைமழை 
அவளின் கோபம் நான் ரசித்த வெள்ளித்திரை 
அக்கோபத்தில் அவளின் கண்கள் 
அட டட டா வார்த்தையே இல்லை.....

மெல்லிடை அசைத்து என் மனம் பறித்து 
அசைந்தோடும் நைல்நதி 
அவள் கைவிரல் அட அதில் 
பேனாவாக எனக்கும் ஆசைதான்.....

அவளின் ஒற்றைப் பின்னல் ஜடை 
என் கண்களுக்கு கிடைத்த கொடை
அவள் கண் சிமிட்டலில் ஆயிரம் 
ரங்கோலி என் நெஞ்சிக்குள்ளே.....

உன் வீட்டு முற்றத்தில் மாங்காய் திருடிய எனக்கு 
உன் மனதை திருட முடியளையடி
முன்பு பைக்ல் ஏறி உன் வீடு கடந்து சென்றேன் 
இப்போது மோட்ட பைக்ல் ஏறி சுற்றுகிறேன் உன் திருமுகம் காண.....

இருந்தும்  நீயோ இத்துணுண்டு கூட 
திரும்ப மாட்டேங்கிற 
பெற்றல் விலை ஏறுதே தவிர 
உன் மனதில் என் நினைப்பு ஏறமாட்டேங்குது.....

அவள் கைகளால் ஆலகால விஷம் கொடுத்தால் கூட 
வாங்கத் துடிக்கும் என் கரங்கள் 
அவள் நெற்றியில் பொட்டு இருக்கோ இல்லையோ 
அனால் விபூதி இருந்தே தீரும்.....

இவ்வளவு உணர்ந்தேன் அவளைப் பற்றி ஆனால் 
அவளுக்கு தெரிந்ததோ என் பெயர் மட்டும்தான்
இருந்தும் ஆடம்பரம் பிடிக்காத 
அழகிய தேவதை என்னவள்!!!