Sunday, May 29, 2011

என்னுள் ஒரு கேள்வி ???


கண்பார்த்துக் காதல் அது பழசு 
கை பட்டுக் காதல் தினிசு 
மனம் பார்த்துக் காதல் புதுசு
காதல் இதை சொல்ல ஏழு ஜெம்மம் தேவை 
சொன்னால் கோடி இன்பம் கிள்ளும் 
அப்படி என்னதான் இருக்கிறது
இந்தக் காதலில் என்று என்னுல் ஒரு கேள்வி???


காதலித்துப் பார் சொர்க்கமும் நரகமும் 
இங்கேயே நிச்சயம் என்று சொன்ன 
கவியரசு கூட சற்று சிந்திக்கிறார் இப்போது
காதலில் சொக்கம் மட்டுமே உள்ளது
அடடா தவரான ஒரு கவிவரியை மொழிந்ததற்கு 
காதலில் விழுந்தவர்களுக்கு 
காதல் உயிரைவிட மேன்மை யானதா 
இதனால்தானோ என்னவோ தற்கொலைகூட தூசாகிவிட்டது 
இதெல்லாம் எப்படியென்று என்னுள் ஒரு கேள்வி???

தர மறுப்பதும் பின் தலை கொடுப்பதும் 
அடம்பிடிப்பதும் பின் மனம் பிடிப்பதும் 
சின்னச் சண்டை பெரிய முத்தம் 
ஒரு துளிக் கண்ணீர் பலதுளி ஆனந்தக்கண்ணீர் 
என்று ஏராளமான சில்மிஷம்
காதலில் மட்டுமே சாத்தியமா என்று என்னுள் ஒரு கேள்வி???

அவளின் அழகான புன்னகையில் 
அழமான தன்நம்பிக்கை 
அவளின் சிறு கண்சிமிட்டலில் 
ஆயிரம் முடிவுகள் 
அவளின் சிறு கன்னக்குழியில் 
என் என்னங்கள் வந்து நிறைய 
பல வண்ணங்கள் மாற 
இப்படிப் பட்ட ஒருத்தியை 
நானும் பார்ப்பேனா 
அவள் விரல் கோர்ப்பேனா 
என் காதல்சிலையை அவள் மனதில் வார்ப்பேனா 
என்று என்னுள் ஒரு கேள்வி???

Sunday, May 22, 2011

உன் ஒற்றை விழிப்பார்வையால் !!!

உன்கண்களுக்குப் பயந்து
ஒஷாமா போல் பதுங்கியிருந்த என்னை
உன் ஒற்றை விழிப்பார்வையால்
சுட்டு வீழ்த்தி கொன்றாயடி பெண்ணே!!!
இதுதான் காதல் கொலையா???

நீயோ சித்தி எய்தினாய் நானோ புத்தி மங்கினேன் !!!

நீ விரல் தொட்டுப் படித்துத் தந்த
புஷ்தகத்தில் நானும் படித்தேன்
உன் கை ரேகை அடையாளங்களை மட்டும்
நீயோ சித்தி எய்தினாய்
நானோ புத்தி மங்கினேன் !!!

பதில் சொல்லடி !!!

இரவுவானுக்கு சந்திரனும் நட்சத்திரமும்
தமிழுக்கு இலக்கணமும் இலக்கியமும்
கவிதைக்கு எதுகையும் மோனையும்
பார்வைக்கு விழியும் ஒளியும்
அழகாகத்தெரியும் போது
உனக்கு மட்டும் ஏன் நானும் என் காதலும்
அழகாகத் தெரிய வில்லை
பெண்ணே பதில் சொல்லடி!!!



இதயத்துடிப்பின் ஓசை !!!

என் இதயம் இப்போது உன் பெயர் சொல்லி துடிக்கிதடி சகியே......
இதயத்துடிப்பின் ஓசையை மாற்றத் தெரிந்த - உனக்கு 
உன் மனதை மட்டும் மாற்ற முடியலயாடி???

Saturday, May 7, 2011

முதற்தோழி நீதான் அம்மா !!!

என்னை எனக்கு உணர்த்திய
என் முதற்தோழி நீதான் அம்மா.....
துயரம் சூழ்கையில் நான் முகம் புதைத்து
கண்ணீர் சிந்துவது உன் மடி தானம்மா!!!

அம்மா உன் வலியால்......

உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே
அழைக்கின்றேன் “அம்மா ” என்று !!!