உன் மேல் விழுந்தது தவறு என்கிறாயா?
இல்லை நான் தவறு செய்யவில்லை - அன்று
நியூ டன் கண்டுபிடித ஈர்ப்பு விசை தவறு என்றால்
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....
நான் உன்னை கண் இமைக்காமல்
பார்த்து ரசிப்பது தவறு என்கிறாயா?
இல்லை நான் தவறு செய்யவில்லை
உன்னை அழகாக படைத்த அந்த பிரமன் தவறு என்றால்
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....
உனக்காக இதயவறையில் கோவில் கட்டியது தவறு என்கிறாயா ?
இல்லை நான் தவறு செய்யவில்லை - அன்று
ஷாஜஹான் மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியது தவறு என்றால்
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....
நான் உன்னைக் காதலித்தது தவறு என்கிறாயா?
இல்லை நான் தவறு செய்யவில்லை - அன்று
ஆதம் ஏவாள் செய்தது தவறு என்றால்
ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததும் தவறு என்று.....!!!
பின் குறிப்பு :
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள்.
02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது.
- Join this site ஐ Click செய்க.
- பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க.
- பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
- பின் done ஐ Click செய்யவும்.

