Saturday, February 26, 2011

கறுப்பு சரித்திரம் இந்த தாடி !!!

நீ முத்தமிட்ட என் கன்னத்தில் வேறுயாரும் முத்தமிடக்கூடாதென்பதற்கே இந்த கறுப்பு முள்வேலி இந்த தாடி என்று சொன்னான் தேவதாஷ் - அன்று

ஆண்களே எதையாவது காதலியுங்கள் பெண்களை தவிர என்பதற்கான கறுத்தக் கொடியே இந்த தாடி என்று சொல்ரான் இந்த சிந்து - இன்று

ஆண்களே நீங்கள் காதலித்த காதலி விட்டுச் செல்லும் காதல் பரிசு இந்த தாடி என்று சொல்ரான் இந்த சிந்து - இன்று

ஆண்களே உங்கள் காதலி புதைத்துச் செல்லும் உங்கள் காதல் நினைவுகளின் மீது முளைக்கும் கறுப்புச்செடியே இந்த தாடி என்று சொல்ரான் இந்த சிந்து - இன்று

சாஜஹான் தன் காதலியின் நினைவாகக் கட்டியது அந்த வெள்ளை தாஜ்மஹால் ஆனால் ஆண்களே உங்கள் காதலியால் கைவிடப்பட்ட கறுப்பு தாஜ்மஹாலே இந்த தாடி என்று சொல்ரான் இந்த சிந்து - இன்று.....

காதல் என்பதும் தீவிரவாதம்தான் !!!

உன் கண்களெனும் கன்னிப் பொறியில்
மாட்டியது என் கால்கலல்ல என் இதயமடி.....
உன் சிரிப்பு எனும் தோட்டா வேட்டுக்களால்
என் இதயத்தை தாக்கினாயடி.....
உன் கால் கொலுசின் சினுங்கல்
ஒவ்வொன்றும் கிரினைட் வீச்சுக்களடி.....

உன் கழுத்தின் சங்கிலி
அதுதானடி எனக்கு கைவிலங்கு.....
அன்பே நீ பேசும் ஒவ்வொரு
வார்த்தைகளும் டைம்வாம்களடி.....
உன் மௌனம்தானடி என்னைத்
தாக்கிய மிகப்பெரிய ஆயுதம்.....

உன் முப்படை கொண்டு என்னைச் சுற்றி வளைத்ததால்
உன் தீவிரவாதத்தில் இன்னும் நான் பணயக்கைதிதானடி சகியே...!!!
ஆனால் நானும் பதில் தாக்குதல்களை நிறுத்தமாட்டேனடி
அடி பெண்ணே நீ என்னையும் என் காதலையும்
எப்படி அடக்க நினைத்தாலும்
என் காதல் சாம்ராஜ்ஜம் அடங்கப் போவதில்லை.....

நானும் ஒரு காதல் தீவிரவாதிதானடி
உன் இதயத்தை ஆக்கிரமித்து - அதில்
என் காதல் கொடியை நடும்வரை - என்
காதல் காகித செல்களால் உன் இதயவரைகளைத்
தாக்கிக் கொண்டே இருப்பேன்.....

நீ என் காதலுக்கு எத்தனை முறியடிப்புகள் தொடுத்தாலும்
நான் ஒரு துளிகூட அஞ்சப்போவதில்லை
நான் உன் இதயத்தை ஆக்கிரமிக்கும்
வரை தொடரும் என் காதல் சமர்.....

உன் அப்பா,அண்ணன் என்ற
அரணுக்குள் மறைந்தாலும் சரி
உன் உறவுகள் என்ற
பாதுகாப்பு நிலையங்களில் பதுங்கினாலும் சரி
என் சமர் தொடரும்.....

எத்தனை இழப்புகள் எனக்கு வந்தாலும்
என் காதல் தீவிரவாதம் தொடரும்- உன்
இதய நாட்டை நான் அடிமை கொள்ளும்வரை.......

அவள் வருவாளா???

முகத்தில் பருக்களும்
உதட்டில் புன் முறுவலும்
வாலிப அரும்புமீசையும்
வானவில் ஆசையும்
கண்ணாடி முன் தலைகோதலும்
உன் பின்னாடி மனப்போக்கலும்
ஏன்? எதற்கு? எனக்கோர் கேள்வி என்னுள்ளே..???

உன்னைப் பார்த்த பின்புதான்
phenylalanine, dopamine & nor-epinephrine
எனக்குள்ளும் சுரப்பதையும்
என்னுள் ஒரு உத் வேகத்தையும்
உணர்ந்தேனடி ப்ரியசகி....

வாழ்க்கை என்றால் ஒரேயொரு மகிழ்ச்சிதான் உண்டு - அது
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தானடி லூசுபெண்ணே
ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களையும் பரிமாறி
விழிகளால் கதைபேசி
மௌனத்தை சுவாசிக்கும்
ஒவ்வொரு நாளும் காதலர்தினம்தான்......

ஆனால் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள்
கொத்துக்கொத்தாகப் பறக்கும் படபடப்புடனும்
காதல் மொழி ததும்பும் வாழ்த்து மடலுடனும்
அசத்தலான கிப்ட்டுடனும்
கிறங்கும் முத்தங்களையும் விஷ்தரிப்பதற்கு
இந்த பூலோகமே காத்திருக்கும் திருநாளது " feb14"

இத்தினத்தில் உன் வலண்டைன்
நானும் காத்திருக்கிறேன்
அஸ்டோரியஸ் உனக்காக
உன் தந்தை கிளாடியை விட்டு வருவாயா???
இல்லை ஏமாற்றம் தருவாயா???

காதல் வேண்டுதல்.....

உன்னை யாரும் காதலிக்கவில்லை
என்று வருந்தாதே.....

அது உன் வருங்கால மனைவின்
வேண்டுதலாகக்கூட இருக்கலாம்.....





Tuesday, February 22, 2011

காதல் அலாரம்.....

இதயம் தூங்கிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் தட்டி எழுப்புகிறது.....!!!