Wednesday, December 21, 2011

என் கவிதைக்கு தாய் நீதானடி !!!


(என் கவிதையெனும் திரைக்கதைக்கு கதாநாயகி நீதானடி !!!)

ஐவிரு மாஷம் சுமந்து பெற்றால் மட்டுமல்ல
ஓரிரு வினாடிகள் மனதில் சுமந்து பெற்றெடுப்பது கூட சிசுதான்.......
என்கவிதைகளைத்தான் சிசு என்று சொல்கிறேன்
அதிலும் அக்குழந்தை எனக்குப் பிறந்த குழந்தை என்பதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான் சொல்ல விரும்புகிறேன்.

அதெப்படி நம் குழந்தை ஆகும்???
என்று நீ கேட்கக்கூடும்......

ஆணும் பெண்ணும் உடலளவில் ஒன்றித்துப் பிறப்பது
உணர்வும் உருவமும் உடைய குழந்தை - ஆனால்
உன்னோடு என் நினைவுகள் நிலவுவதால்
உணர்வை மட்டும் கொண்ட கவிதையெனும் குழந்தை பிறக்குதடி சகியே!!!

உயிருள்ள சிசுக்கு காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான் தந்தை யாரென்று தெரியும்
என் கவிக்குழந்தைக்கு தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு தாய் நீ என்று தெரியவரும்

கருவை சுமப்பதால்  பெண்  தாயாகிறாள்
உன்னையும் உன் உணர்வுகளையும்
நினைவுகளையும் சுமப்பதால்
நான் எல்லாமும் ஆகிறேன்.

Sunday, December 4, 2011

காலம் பதில் சொல்லுமா???


புல்லாங்குழல் இசைப்பவனின்
இசையை ரசிக்கும் ரசிகர் மத்தியில்
அவன் உதட்டுக் காயத்துக்காய்
கண்ணீர் கசிந்த சிந்து நான்.....

இன்று என் இதயக்காயத்துக்காய்
மௌனமாய் கண்மூடி அழுகிறேன்
மழையில் நனைந்தபடி காரணம் இன்றி
காலம் பதில் சொல்லுமா???


காதல் ஏழை.....


ஹைக்கூவில் குபேரனாக
இருக்கலாம் இவன் - ஆனால்
காதலில் மாபெரும் ஏழைதான்
மழையையும் மண்ணையும் நம்பி
வியசாயி விதைப்பதைப் போல் - இவன்
அவளையும் அவள்மீதுள்ள பாசத்தையும்
நம்மி காதலை விதைத்தான்
கடைசி வரைக்கும் விழைச்சல் கிடக்கவில்லையே!!!
கவிதைக்காக மட்டும் தலை குனிந்த என் பேனா
முதல் முறை உன்னிடம் தலை குனிந்து கேட்கிறது
இந்த  காதல் ஏழைக்கு பிச்சையிடு என்று.....

புரியாத புதிரே???


புதிதாய் பூத்த மலராய்
புரிந்தாய் ஒரு புன்னகை
புரிந்த அந்த புன்னகையால்
புதை மணலாய் புதைந்தேனே.....
புரட்டிய என் புஷ்த்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
புனிதமான உன் கால் தடங்கள்.....
புல்லாங்குழல் காற்றைப்போல் - உன்
புருவத்தின் அபிநயம் கண்டு
புட்டுக்கிச்சி என் வாய் வார்த்தைகள்.....
புலராத என் காலைப்பொழுதில்
புதுமை செய்தது உன் கைவிரல் கோலங்கள - உன்
புன்னகை தேசத்தில்
புத்தராய் நான் சகலமும் திறந்தேன்
புரியாத புதிரே என்றும் நீ எனக்கு!!!