Wednesday, July 4, 2018

எல்லாமே உனக்காக !!!


உன் பார்வை என்னை தீண்டத்தீண்ட
என் விழிகள் தோற்று போகிறதே
உன் மௌனம் என்னை தாக்கத்தாக்க
என் வார்த்தை தொலைந்து போகிறதே !

உன்னையே நேசித்தேன்
உன் மூச்சையே சுவாசித்தேன்...

உன் சுவாசம் காற்றில் சேரச்சேர
என் மூச்சி நின்று நின்று போகிறதே
உன் இதழ்கள் மெல்ல சுழிக்கச்சுழிக்க
என் கால்கள் காற்றில் மிதக்கிறதே !

உன்னையே நேசித்தேன்
உன் மூச்சையே சுவாசித்தேன்...

எல்லாமே உனக்காக
என் உயிர் கூட உனக்காக....!
எல்லாமே உனக்காக
என் ஜெம்மமே உனக்காக......!