Friday, March 25, 2011

பெப்ரவரி போர்ட்டீன்...!!!

சுவாசமில்லாமல் உயிர்யில்லை
சுரம் இல்லாமல் ராகமும் இல்லை

நீலமில்லாமல் வானமும் இல்லை
நீ இல்லாமல் நானுமே இல்லை

பகல் கனவில் உன் நினைவுகள்
பதராமல் தூங்கிக் கொண்டிருக்கிறது

எழுந்து விட்ட என் வேலை
எழுதிக் கொண்டது விடுமுறை

திங்களுக்குள் தித்திக்கும் திங்களிது
தினம்மாறலாம் கிழமை மாறாது

உன் உருவம் ஒன்று வரைந்தேன்- அதற்கு
உயிர் தருமா பெப்ரவரி14

உன் பதிலுக்காக செம்மஞ்சள் உடைதனில்- நான்
உன் வரவு வந்து பதில் தருமா?

Monday, March 21, 2011

கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!

மின்னலை ரசித்தால் அது என் கண்ணுக்கு ஆபத்தென்பதை உன் கண்களைக் கண்டதும்தான் கண்டுகொண்டேன்.....

உன் புன்னகையை ரசித்ததால்தான் என் தூக்கத்துக்கு ஆபத்தென்பதை கண்டுகொண்டேன்.....

உன்னைப் பார்த்தபின்புதான் கம்பன் எழுதமறந்த கவிதையும் இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.....

உன் குரலைக்கேட்ட பின்புதான் தவரவிடப்பட்ட ஸ்வரமொன்று இருப்பதை உணர்ந்து கொண்டேன்.....

உன் கண்களின் ஈர்ப்பு விசைக்கு விதியெழுத முடியாதென்பதால்தான் நியுட்டன் இப்போது இல்லையென்பதை கண்டுகொண்டேன்...!!!

Saturday, March 19, 2011

சுப்பர் பௌர்ணமி !!!

விஞ்ஞானம் உணர மறுத்த உண்மையிது
நிலவிடம் கூறினேன் உன்னைவிட பிரகாஷமான
அழகான ஒருத்தி பூமியில் உள்ளாள் என்றேன்........!!!
எங்கே காட்டு பார்ப்பம் என்று கூறி
உன்முகம்கான அருகில் வருகுதடி நிலா
ஆனால் நானோ இரு நிலவுகளின்
பிரகாஷத்தால் பார்வையிழந்து தவிக்கிறேன்.......!!!

Friday, March 18, 2011

மன்னிப்புப் பூக்களை காணிக்கை யாக்கமாட்டாயா ???

எவ்வளவோ பாவங்கள் செய்தவர்களுக்கே பாவமன்னிப்பு கொடுக்கும் காலமிது -ஆனால்
நான் செய்ததும் குறும்புத்தனமான சிறு தவறுதான் நான் அதை மறுக்கவில்லை.....

அந்த குறும்பு வார்த்தை உன் மனதை இரும்பாக தாக்குமென நினைக்கவில்லை இந்தப் பாவி.....
ஆனால் இன்று உணர்கிறேன்.....

மன்னிப்பு என்பதை பிறர் நமக்கு கொடுப்பதைவிட
நாம் பிறர்க்கு கொடுப்பதே சிறந்தது என்பார்கள்.....
அதை கூட நீ எனக்கு தரமாட்டாயா???

நேற்று உன்கைகளை முட்களால் காயப்படுத்திய ரோஜா
இன்று கண்ணீர் விட்டு அழுகிறது பனித்துளியாக.....
மன்னிக்கமாட்டாயா என்று!!!

இன்று கண்ணீர் கோடுகள் நீண்டு கொண்டு செல்கிறது என் கன்னத்தில்
உன் ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தமாட்டாயா தோ(ழனே)/ (ழியே)?????

என் ஏக்க மூச்சை, என் கண்ணீர் துளிகளை, என் விம்மல் வெடிப்புக்களை, மௌன ராகங்களை மன்னிப்பாய் ஏற்று
மீண்டும் உன் நண்பனாக அங்கிகரிப்பாயா?????

மன்னிப்புப் பூக்களை காணிக்கையாக்கமாட்டாயா????
காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக என்றும்
அன்பு நண்பன் சிந்துஜன்.....

நண்பேண்டா !!!

விளக்காய் விழித்திருக்க உன் வீட்டு வாச்மேனுமல்ல....
வசதியுள்ளவரை மட்டும் பழக உன் உறவினருமல்ல....
புரியும் வரை கற்பிக்க உன் ஆசானுமல்ல....

பர்சில் பணமிருக்கும் வரை மட்டும் பழக உன் காதலியுமல்ல....
கல்யாணம் வரை மட்டுமிருக்கும் காதலுமல்ல....
உயிருள்ள வரை நிழலாய் தொடரும் உன் நண்பேண்டா நான்!!!




Monday, March 7, 2011

காதல் வாடகை!!!

பெண்ணே என்னைப்பிடிக்கவில்லையென்றால்
இவ்வளவு நாட்களும் என் இதயவறையில்
தங்கி இருந்ததற்கு வாடகையை தந்துவிட்டு செல்லடி....

Friday, March 4, 2011

சிந்துவின் காதலித்துப் பார் !!! (வைரமுத்து சொல்ல மறந்தவை)

காதலித்துப் பார் உன்
சமூகம் உன்னை வெறுக்கும்
சகோதரங்கள் கேவலமாக பார்ப்பார்கள்
உன் தாய் தந்தையின் பார்வை உன் மேல் மட்டும் விழுவதாக உணர்வாய் காதலித்துப்பார்  !!!

பர்ஷில் இருக்கும் பணம்
செல்போன் பில்லுக்கு மட்டுமே போதுமாய் இருக்கும்
உன்னிடம் இருக்கும் நகைகள் கூட
அடகுக்கடையை நாடுவதை உணர்வாய்
காதலித்துப்பார்  !!!

கடிகாரமுட்கள் எவ்வளவுதான் சுழன்றாலும்
இரவில் உன் கண்ணில் தூக்கம் தங்காது
இரவுகள் நீண்டு கொண்டே செல்லும்
எவ்வளவுதான் ஆகாரம் இருந்தாலும்
பசி என்ற வார்த்தைக்கு இடமிருக்காது
தனிமையே இனிமையாக இருக்கும்
காதலித்துப்பார்  !!!

அக்கினி சுடாது
பனித்துளி குளிராது
காயம் வலிக்காது
காது கேட்காது
நாக்கு சுவையை உணர மறுக்கும்
கைகள் கவிதை கிறுக்கும்
பொய்கள் உதட்டில் தவழும்
இதற்காகவேண்டியாவது
ஒரு முறை காதலித்துப்பார்  !!!

உன் காதலனோ அல்லது காதலியோ
உனக்கு அழகாக தெறிவார்கள்
நீ காதலிப்பவரின் காட்தடம் ஓவியமாக தெறியும்
சிரிப்பு வயலின் இசைமீட்டும்
அசைவுகள் ஒவ்வொன்றும் உனக்கும் திசை காட்டும்
காதலித்துப்பார் !!!

இயற்கையையும் உன்னையும்
உனக்கும் அதிகம் பிடிக்கும்
சில சமயம் சுயநலவாதியாகக்கூட மாறுவாய் "கவனம்"
காதலித்துப்பார் !!!
காதலித்துப்பார் !!!
காதலித்துப்பார் !!!

http://www.youtube.com/watch?v=HN0JF3K3MLk

Wednesday, March 2, 2011

ஏன் காதலை வெறுக்கிறீர்கள் !!!

தொப்புள் கொடியில் தொடங்கிய நம் காதல் பயணத்திற்கு
இன்னும் சேரவேண்டிய இடம் வரவில்லையே.....
கருவறையில் தொடங்கிய நம் காதல் புஸ்த்தகத்தின்
பக்கங்கள் இன்னுமே புரட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.....
இந்தப் பூலோகமே - காதல்
சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.....

மண்ணுக்கும் மழைக்கும் காதல்
விண்ணுக்கும் முகிழுக்கும் காதல்
கடலலைக்கும் கரைக்கும் காதல்
காற்றுக்கும் இசைக்கும் காதல்
பூவுக்கும் வண்டுக்கும் காதல்
இரவுக்கும் இருளுக்கும் காதல்
உடலுக்கும் உயிருக்கும் காதல்
கல்லுக்கும் சிற்பத்துக்கும் காதல்.......

இயற்கையே காதலில் விழுந்தபோது
நீங்கள் மட்டும் ஏன் காதலை வெறுக்கிறீர்கள்......
காதல் இல்லையேல் கவிதை எங்கே?
காவியம் எங்கே?
கம்பன் எங்கே?
நீங்கள் எங்கே?
நான் எங்கே ???

ஆதாம்- ஏவாள்
லைலா-மஜ்னு
சத்தியவான்-சாவித்ரி
சாஜஹான்- மும்தாஜ்......
இவர்களின் உடல்கள்தான் புதைக்கப்பட்டாலும்
அவர்களின் காதல் இன்னுமே வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது....
உங்கள் உடலை உயிர் காதலிக்க மறுத்தால்
நீங்கள் கூட வெறும் பிணம்தான்.....
உயிர்கூட உடலைக் காதலிக்கும் போது
நீங்கள் மட்டும் காதலை வெறுப்பது தகுமா?

பூக்கள் புகார் செய்து தோட்டக்காரனின் வேலை தொலைவதில்லை
நீங்கள் காதல் செய்தால் உங்கள் வாழ்க்கையும் தொலையாது......
கவிதையை காதலிக்கும் நீங்கள்
காதலையும் காதலித்துப் பாருங்கள் ஒருமுறையாவது....!!!
http://www.youtube.com/watch?v=S16801fIFCc