Sunday, October 16, 2011

ஏமாற்றம் மட்டுமே !!!


நேற்று பௌர்ணமி தேடியலைந்த என் கண்களுக்கு 
இன்று கிடைத்தது வெறும் மூன்றாம் பிறை மட்டுமே !!! 
நேற்று நான் செலுத்திய என் காதல் விண்களம்
இன்று தரை சேர்ந்தது வெறும் சாம்பலாய் !!!


நேற்று நான் சேர்த்து வைத்த உன் சிரிப்பொலியின் ஓசை
இன்று கேட்கிறது என்தன் விம்மல் அழுகுரலாய் !!!
நேற்று நான் அனுப்பிய என் காதல் காகிதங்களுக்கு 
இன்று பதில் வந்தது என் மரணப் பத்திரிக்கையாய் !!!


நேற்று என்னுல் நடத்திய காதல் வேள்வில் எரிந்த சுடர் 
இன்றும் சுடர் விட்டு எரிகிறது என் மரணப் படுக்கைக்கு முன் விளக்காய் !!!  
நேற்று நான் அனுப்பிய ரோஜா மலர்கள் 
இன்று வந்தது என் கல்லறை மேல் மலர் வலையங்களாய் !!!


நேற்று நான் நட்ட முல்லைச் செடி 
இன்று துளிர்த்தது முட்கள் நிறைந்த கள்ளிச்செடியாய் !!!
நேற்று செய்த அனைத்துக்கும் பதில் 
இன்று வெறும் ஏமாற்றம் மட்டுமே !!!