Wednesday, August 3, 2011

சிந்துவின் சொல்ல மறந்த காதல் !!! (plz feel my luv)


காதல் !!!
இது என்னைப்போன்றவர்களுக்கு
வெறும் சொப்பணமாகவே ஆகிவிட்டது - ஆனால்
பல முறை சொல்லியிருக்கிறேன் கனவில் என் காதலை - இருந்தும்
நிஜத்தில் அது வெறும் கனவாகவே கலைந்து விட்டது.

கல்லூரியில் உனைப் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும்
நினைப்பேன் இவள்தான் என்னவளா என்று.
நாம் பேசியதில்லை வார்த்தைகளால் - ஆனால்
என் கண்களால் பேசியிருக்கிறேன் பலமுறை
இருந்தும் உன் பதிலோ மௌனம் மட்டுமே.
அப்போதெல்லாம் இவள் எனக்கேற்றவள் இல்லையா???
இவளை நான் எந்த விதத்தும் இம்பிரஷ் பன்னலயா???
என்று எனக்குள்ளே பல கேள்விகள்
இன்னும்கூட பதில் தெரியாத கேள்விகளே அவைகள்.....

உன் பெயரில் உள்ள ஐந்து எழுத்துக்களாலும்
என் ஐம் புலங்களையும் அடக்கியவளே
இக்கவிதை பூவை முகரும் போதாவது உணர்வாய்
இப்படி என்னையொருவன் காதலித்திருக்கிறான் என்று.....

இது வெறும் கவிதை என்று மட்டும் நினைக்காதே
என் ஒருதலைக் காதல் காவியத்தில் எஞ்சிய ஒரு இதழ்
இக்காவியத்தை இத்துடன் நிறைவு செய்யவா
தொடரவா பதில் உன்னிடமே !!!!!

என்காதல் மட்டும் சற்று விதிவிலக்குங்க
வார்த்தைகளேயில்லை, மெஷ்ஷேஜ்
போன் ஹோல்ஷில்லை, சந்திப்பில்லை
சடுகுடுவில்லை, சில்மிஷமில்லை, கடிதமில்லை - ஆனால்
நீங்கள் கேட்கலாம் இப்படி எதுவுமே இல்லை இது காதலா என்று
எனக்கும் புரியாமல்தான் இருக்கிறது
இருந்தாலும் இது காதல்தான் எனக்கு
இக் கவிதைதான் முதலும் இறுதியுமான
என் காதல் காகிதம்.

உனக்கு தெரியாமலே உனை காதலிக்கிறன்
உன்னை நேசிக்கிறேன்
உன் மூச்சி காற்றையே சுவாசிக்கிறேன்
அதிலும் ஒரு சுகந்தான் - எனக்கு
நீயும் என்னைக் காதலிக்க வேண்டும் என்று கேட்கவில்லை "just feel my luv"

இன்று நீ எங்கோ நான் எங்கோ
தூரத்தினால் பிரிந்திருக்கிறேன் நினைவினால் அல்ல
என் காதலை நேரடியாக சொல்லமறந்தாலும்
இக்கவிமூலம் சொல்ல நினைக்கிறேன் உணர்ந்தால் பதில்போடு
இல்லையென்றால் உன் திருமணப்பத்திரிக்கையையாவது கொடுத்து விடு
நானும் வந்து அர்ச்சனை தூவி வாழ்த்துகிறேன்
நீ பல்லாண்டு வாழ !!!