Wednesday, September 10, 2014

எப்படி மனசுக்குள் வந்தாய்??? (கேட்டதில் பிடித்தது)

ஒரு பார்வையிலே என்னை வீழ்த்திவிட்டாய் அடியேய்…
சிறுபுன்னகையால் விலை பேசிவிட்டாய் எனையே…
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே…
காதல் எனறொரு நூலகம்  
என் மனதில் திறந்து வைத்தாள்
சொர்க்கம் என்றொரு புத்தகம்  
என்னை தினமும் படிக்க வைத்தாள்
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே…
பழி தீர்ந்திடுமோ உயிர் மீண்டிடுமோ சகியே…
 
உன் விழிகளோடு விழிகளோடு என்னை
விழுங்கும் போது கண்ணே
கருநாகம் ஒன்று என்னை தீண்டும் வலி கண்டேன்
புது நதியை போல நதியை போல நீயும்
வளைந்து நெளிந்து ஓடி
என் காதல் தேசம் பூக்கள் பூக்கும் உயிர் கண்டேன்
எனை வாழ வைப்பாயோ இல்லை வீழ வைப்பாயோ
உன் மடியோடு எனை சாய்த்து நீ கொடுக்கும் முத்தங்கள்
உயிர் காக்கும் மருந்தென்று மறுவாழ்வு பெறுவேன்
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே…
பழிதீர்ந்திடுமா உயிர் மீண்டிடுமா சகியே…

கோவில் தெருவில் கோவில் தெருவில் தொலைந்து
அழுது புலம்பும் குழந்தை
அது மீண்டும் சேர்ந்து சிரிக்கும் புதுமை நீ தந்தாய்
உன்னை மட்டும் பார்த்து  
சிரித்து ரசிக்கும் காதல் குருடனாக்கி
நீ மேலும் கீழும் உருட்டி என்னை ரசிக்கின்றாய்
உன் வாக்கு தெரியாமல் என் வாழ்க்கை நகராது
உயிர் நூலை வடம் செய்து காதல் தேரை இழுக்காதே
என் தாய் தந்த உயிரை நீ கொலை செய்ய
துணிந்தாயோ அஹிம்சைகள் நீ தந்து
இம்சைகள் செய்தாய்.....!!!

http://www.youtube.com/watch?v=-7D72VHEfp0&feature=youtu.be&a