Wednesday, June 12, 2013

காதல் திரிதம் !!!

நீ ஒரு திசையிலும் நான் ஒரு திசையிலும் 
அலைந்து திரிந்தோம் இரு காற்றாடியாய் 
சந்தித்தோம் ஒரு திரிதத்தின் இரு அயட்பக்கங்களாய் 
தோழமை மலர்ந்தது மிளிர்ந்தது அது 

மெல்ல மெல்ல காதலாய் வளர்ந்தது..... 
பெண்ணே நாம் நம் காதலால் - இன்று 
ஒரு காதல் திரிதத்தை உருவாக்கி 
அந்த பைதகரஷையே பெருமைப்படுத்தி விட்டோம் !!!

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்

Sunday, June 2, 2013

அம்மா உன் அன்பை தேடி.....

(தாயை விட்டு பிரிந்து வசிக்கும் ஒவ்வொரு சிந்துக்களின் கண்ணீர் காணமிது....)

என் கண்ணில் வழியும் கண்ணீர் தரை தொட முன்னமே
துடைத்து ஆறுதல் சொல்வாயம்மா
இங்கே என் கை குட்டை எனைக்கேள்வி கேட்கிறது .....

வெளியே புன்சிரிப்பு உள்ளே கண் கசக்கு - என
ஏன் இரட்டை வேடம் என்று
முகம் பார்க்கும் கண்ணாடி எனைக்கேள்வி கேட்கிறது .....

உறங்கும் போது காபி..... எழும் போது காபி.....
என உன் அன்புக்கரத்தால் தருவாயே அம்மா - ஆனால்
இங்கு எனை எழுப்பும் அலாரம்கூட சிரிக்குதம்மா.....

அன்று வலிக்கவில்லை - ஆனால்
இப்ப வலிக்குதாம்மா..... நெஞ்சுதவிக்கிதம்மா.....
உன் அன்பை தேடி.....

பின் குறிப்பு : 

01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்.