Friday, March 18, 2011

மன்னிப்புப் பூக்களை காணிக்கை யாக்கமாட்டாயா ???

எவ்வளவோ பாவங்கள் செய்தவர்களுக்கே பாவமன்னிப்பு கொடுக்கும் காலமிது -ஆனால்
நான் செய்ததும் குறும்புத்தனமான சிறு தவறுதான் நான் அதை மறுக்கவில்லை.....

அந்த குறும்பு வார்த்தை உன் மனதை இரும்பாக தாக்குமென நினைக்கவில்லை இந்தப் பாவி.....
ஆனால் இன்று உணர்கிறேன்.....

மன்னிப்பு என்பதை பிறர் நமக்கு கொடுப்பதைவிட
நாம் பிறர்க்கு கொடுப்பதே சிறந்தது என்பார்கள்.....
அதை கூட நீ எனக்கு தரமாட்டாயா???

நேற்று உன்கைகளை முட்களால் காயப்படுத்திய ரோஜா
இன்று கண்ணீர் விட்டு அழுகிறது பனித்துளியாக.....
மன்னிக்கமாட்டாயா என்று!!!

இன்று கண்ணீர் கோடுகள் நீண்டு கொண்டு செல்கிறது என் கன்னத்தில்
உன் ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தமாட்டாயா தோ(ழனே)/ (ழியே)?????

என் ஏக்க மூச்சை, என் கண்ணீர் துளிகளை, என் விம்மல் வெடிப்புக்களை, மௌன ராகங்களை மன்னிப்பாய் ஏற்று
மீண்டும் உன் நண்பனாக அங்கிகரிப்பாயா?????

மன்னிப்புப் பூக்களை காணிக்கையாக்கமாட்டாயா????
காத்திருக்கிறேன் உன் பதிலுக்காக என்றும்
அன்பு நண்பன் சிந்துஜன்.....

No comments:

Post a Comment