Friday, March 4, 2011

சிந்துவின் காதலித்துப் பார் !!! (வைரமுத்து சொல்ல மறந்தவை)

காதலித்துப் பார் உன்
சமூகம் உன்னை வெறுக்கும்
சகோதரங்கள் கேவலமாக பார்ப்பார்கள்
உன் தாய் தந்தையின் பார்வை உன் மேல் மட்டும் விழுவதாக உணர்வாய் காதலித்துப்பார்  !!!

பர்ஷில் இருக்கும் பணம்
செல்போன் பில்லுக்கு மட்டுமே போதுமாய் இருக்கும்
உன்னிடம் இருக்கும் நகைகள் கூட
அடகுக்கடையை நாடுவதை உணர்வாய்
காதலித்துப்பார்  !!!

கடிகாரமுட்கள் எவ்வளவுதான் சுழன்றாலும்
இரவில் உன் கண்ணில் தூக்கம் தங்காது
இரவுகள் நீண்டு கொண்டே செல்லும்
எவ்வளவுதான் ஆகாரம் இருந்தாலும்
பசி என்ற வார்த்தைக்கு இடமிருக்காது
தனிமையே இனிமையாக இருக்கும்
காதலித்துப்பார்  !!!

அக்கினி சுடாது
பனித்துளி குளிராது
காயம் வலிக்காது
காது கேட்காது
நாக்கு சுவையை உணர மறுக்கும்
கைகள் கவிதை கிறுக்கும்
பொய்கள் உதட்டில் தவழும்
இதற்காகவேண்டியாவது
ஒரு முறை காதலித்துப்பார்  !!!

உன் காதலனோ அல்லது காதலியோ
உனக்கு அழகாக தெறிவார்கள்
நீ காதலிப்பவரின் காட்தடம் ஓவியமாக தெறியும்
சிரிப்பு வயலின் இசைமீட்டும்
அசைவுகள் ஒவ்வொன்றும் உனக்கும் திசை காட்டும்
காதலித்துப்பார் !!!

இயற்கையையும் உன்னையும்
உனக்கும் அதிகம் பிடிக்கும்
சில சமயம் சுயநலவாதியாகக்கூட மாறுவாய் "கவனம்"
காதலித்துப்பார் !!!
காதலித்துப்பார் !!!
காதலித்துப்பார் !!!

http://www.youtube.com/watch?v=HN0JF3K3MLk

No comments:

Post a Comment