கண்பார்த்துக் காதல் அது பழசு கை பட்டுக் காதல் தினிசு
மனம் பார்த்துக் காதல் புதுசு
காதல் இதை சொல்ல ஏழு ஜெம்மம் தேவை
சொன்னால் கோடி இன்பம் கிள்ளும்
அப்படி என்னதான் இருக்கிறது
இந்தக் காதலில் என்று என்னுல் ஒரு கேள்வி???
காதலித்துப் பார் சொர்க்கமும் நரகமும்
இங்கேயே நிச்சயம் என்று சொன்ன
கவியரசு கூட சற்று சிந்திக்கிறார் இப்போது
காதலில் சொக்கம் மட்டுமே உள்ளது
அடடா தவரான ஒரு கவிவரியை மொழிந்ததற்கு
காதலில் விழுந்தவர்களுக்கு
காதல் உயிரைவிட மேன்மை யானதா
இதனால்தானோ என்னவோ தற்கொலைகூட தூசாகிவிட்டது
இதெல்லாம் எப்படியென்று என்னுள் ஒரு கேள்வி???
தர மறுப்பதும் பின் தலை கொடுப்பதும்
அடம்பிடிப்பதும் பின் மனம் பிடிப்பதும்
சின்னச் சண்டை பெரிய முத்தம்
ஒரு துளிக் கண்ணீர் பலதுளி ஆனந்தக்கண்ணீர்
என்று ஏராளமான சில்மிஷம்
காதலில் மட்டுமே சாத்தியமா என்று என்னுள் ஒரு கேள்வி???
அவளின் அழகான புன்னகையில்
அழமான தன்நம்பிக்கை
அவளின் சிறு கண்சிமிட்டலில்
ஆயிரம் முடிவுகள்
அவளின் சிறு கன்னக்குழியில்
என் என்னங்கள் வந்து நிறைய
பல வண்ணங்கள் மாற
இப்படிப் பட்ட ஒருத்தியை
நானும் பார்ப்பேனா
அவள் விரல் கோர்ப்பேனா
என் காதல்சிலையை அவள் மனதில் வார்ப்பேனா
என்று என்னுள் ஒரு கேள்வி???
No comments:
Post a Comment