இணையத்தில் தொடங்கி
இதயத்தில் இணைந்தாய் - இன்று
துடிக்கிறது உன் பேர் சொல்லி
கனவுகளில் நிதம் வந்து
தூக்கத்தை கலைத்தாய் - இன்று
உறங்கவில்லை என் விழிகள்
மொழிகளால் தினம்பேசி
வார்த்தையை மறக்கடித்தாய் - இன்று
மௌனத்தில் என் இதழ்கள்
கண் சிமிட்டலால் கலங்கரை
விளக்கேற்றினாய் - இன்று
ஜொலிக்கிறது என் இரவுகூட
கன்னக்குழி சிரிப்பினால்
சில்மிஷம் செய்தாய் - இன்று
சொர்கமே அந்தக்குழி எனக்கு
முத்தத்தால் யுத்தம் செய்து
என் கர்வத்தை பஷ்பமாக்கினாய் - இன்று
ஒன்ஸ் மோர் கேக்கிறது பாவம்
நேற்று தோழி, இப்போது காதலி
காத்திருக்கிறேன் - இன்று
உனை மனைவியாக்கும் தருணத்துக்காய்.
இதயத்தில் இணைந்தாய் - இன்று
துடிக்கிறது உன் பேர் சொல்லி
கனவுகளில் நிதம் வந்து
தூக்கத்தை கலைத்தாய் - இன்று
உறங்கவில்லை என் விழிகள்
மொழிகளால் தினம்பேசி
வார்த்தையை மறக்கடித்தாய் - இன்று
மௌனத்தில் என் இதழ்கள்
கண் சிமிட்டலால் கலங்கரை
விளக்கேற்றினாய் - இன்று
ஜொலிக்கிறது என் இரவுகூட
கன்னக்குழி சிரிப்பினால்
சில்மிஷம் செய்தாய் - இன்று
சொர்கமே அந்தக்குழி எனக்கு
முத்தத்தால் யுத்தம் செய்து
என் கர்வத்தை பஷ்பமாக்கினாய் - இன்று
ஒன்ஸ் மோர் கேக்கிறது பாவம்
நேற்று தோழி, இப்போது காதலி
காத்திருக்கிறேன் - இன்று
உனை மனைவியாக்கும் தருணத்துக்காய்.

Lovely.Kaatale Jayam.
ReplyDeleteநன்றி நண்பா !!
Deleteசகோ நீங்க ஒரு கவிப்பேரரசு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோ !!
Delete