எனக்கென வந்தாய் - என்
வாழ்வின் அர்த்தம் தந்தாய்
நினைவினில் நின்றாய் - என்
நிழலினை வென்றாய்
நிலவென வந்தாய் - என்
வாழ்வில் வெளிச்சம் தந்தாய்
இனிப்பென வந்தாய் - என்
இதழினில் இனித்தாய்
மழையென வந்தாய் - என்
மனதினில் நிறைந்தாய்
காற்றென வந்தாய் - என்
சுவாசத்தில் கலந்தாய்
அன்பென வந்தாய் - என்
அகிலத்தை ஆண்டாய்
வானவில்லாய் வந்தாய் - என்
காதலை தந்தாய் - என்
கர்வத்தை மண்ணோடு
மண்ணாக்கி என்னை வென்றாய் !!!

No comments:
Post a Comment