Tuesday, December 18, 2018

எனைமாற்றும் காதலே !!! (R LOVE S)

இணையத்தில் தொடங்கி
இதயத்தில் இணைந்தாய்  - இன்று
துடிக்கிறது உன் பேர் சொல்லி

கனவுகளில் நிதம் வந்து
தூக்கத்தை கலைத்தாய்  - இன்று
உறங்கவில்லை என் விழிகள்

மொழிகளால் தினம்பேசி
வார்த்தையை மறக்கடித்தாய் - இன்று
மௌனத்தில் என் இதழ்கள்

கண் சிமிட்டலால் கலங்கரை
விளக்கேற்றினாய் - இன்று
ஜொலிக்கிறது என் இரவுகூட

கன்னக்குழி சிரிப்பினால்
சில்மிஷம் செய்தாய்  - இன்று
சொர்கமே அந்தக்குழி எனக்கு

முத்தத்தால் யுத்தம் செய்து
என் கர்வத்தை பஷ்பமாக்கினாய்  - இன்று
ஒன்ஸ் மோர் கேக்கிறது பாவம்

நேற்று தோழி, இப்போது காதலி
காத்திருக்கிறேன் - இன்று
உனை மனைவியாக்கும் தருணத்துக்காய்.

4 comments: