Tuesday, April 30, 2013

உழைக்கும் கரங்கள் !!!


(முதல் முறையாக சமூகவியல் கருத்துக்களை பகிர்கிறேன். கீழ் மட்டத் தொழிலாளிகளுக்காக இந்தக் கிறுக்கல்)

தன் வேர்வைத்துளியை விதைத்து
முயட்சி எனும் நீரூற்றி
கடின உழைப்பை உரமாக்கிய
ஒவ்வொரு தொழிலாளியையும்
இன்று நாம் போற்றுவோம்.....

நீ சிந்திய ஒவ்வொரு வியர்வைத்துளியும்
இன்று உன்பேர் சொல்லும்
உன் உள்ளங்கை காயங்களில் வழிந்தோடும்
உதிரம் உனைப் பற்றி கவிவடிக்கும்
உன் உடலின் ஒவ்வொரு அவையும்
படும் பாட்டை யாமறியோம்.....
உன் சரீரம் கொண்ட ஒவ்வொரு வலியும் 
எம் இதயங்களையும் வலிக்கச்செய்யும் - ஆனால்
நீங்கள் கண்ணீர் மட்டும் சிந்தாதீர்கள்
அது இந்த பூலோகத்தையே சுட்டெரித்து விடும்.....

தரணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சிந்துவின் வாழ்த்துக்கள்.....!!!

















பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்.

2 comments: