நானும் உறங்கினேன் - ஆனால்
என் நினைவுகள் உறங்கவில்லை
பேர்ஜ் கலீபாவின் உயரம் வரை அலைந்து திரிந்தது.....
சிந்து இன்னும் சாப்பிட வில்லையா
என்ற அக்காவின் குறலோசை
மகன் இன்னும் தூங்க வில்லையா
என்ற அம்மாவின் குறலோசை - என்
இரு செப்பறைகளிலும் எதிரொலிப்பது போலிருக்க
என்னிரவுகள் நீண்டபடியே தொடர்ந்தது.....
ஒன்றல்ல இரண்டல்ல ஐவிரு
நேர்முகப் பரீட்சைகள் - பதில்
நாளை கிடைக்குமா? இல்லையா? - என்று
நினைத்தபடியே என் இமை மூட மறந்தது.....
விலைமாதுகளின் அணிவகுப்பு ஒரு புறம்
அதை விலை பேச சேட்டாக்களின் அணிவகுப்பு மறு புறம்
இந்த தெருக்கூத்தின் நடுவில் - என்
துபாய் வாழ்க்கை நடந்தேறியது......
என் வேலைக்கும் பதில் கிடைத்தது
அத்தனை தடைகளிலும், அத்தனை சிக்களிலும்
நண்பனாய், தந்தையாய் தோள் கொடுத்தாய் - அண்ணா
என்றும் தொடர நம் இரத்த உறவு.....
பின் குறிப்பு :
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள்.
02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது.
- Join this site ஐ Click செய்க.
- பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க.
- பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
- பின் done ஐ Click செய்யவும்.

nica anna keep it up...
ReplyDeletethx brother ....
ReplyDelete